புதிய தேர்தல் முறைமையின் கீழ் 8,325 உறுப்பினர்களை தெரிவு செய்யும் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று…

புதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்று(10) ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் இன்றைய தினம்(10) நடைபெறுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான 8,325 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 57,252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்காக 43 அரசியல் கட்சிகளும் 222 சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் களமிறங்கியுள்ளன.

மேலும் 13,374 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று காலை சரியாக 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma…