புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளது.
சபாநாயகரின் நியமனத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்குமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐ.தே.கவின் தேசியப் பட்டியிலில் முன்னாள் அமைச்சர் கரு ஜெயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் புதிய நாடாளுமன்றத்தின் முதல் உறுப்பினராக கரு ஜெயசூரிய பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(riz)