புதிய பொலிஸ்மா அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று அரசியலமைப்பு சபையில் இடம்பெறவுள்ளதாகவும், இந்த நிகழ்வானது இன்று மாலை 3 மணியளவில் இடம்பெறும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த நிகழ்விற்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை அழைக்க வேண்டாம் என ஒன்றிணைந்த எதிர்கட்சியின் சார்பில் கோரிக்கை விடுப்பதாக தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பாட்டலி சம்பிக்க நீதிமன்றம் மற்றும் பொலிஸாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வரும் நபர் என்ற காரணத்தினால் அவரை இந்நிகழ்விற்கு அழைப்பதை தடை செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பொலிஸ்மா அதிபர் பதவிக்காக எஸ்.எம்.விக்கிரமசிங்க, சந்தன விக்கிரமசிங்க மற்றும் பூஜித ஜயசுந்தர ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு சபையால் தேர்ந்தெடுக்கப்படும் நபரின் பெயர் ஏற்கனவே ஜனாதிபதிக்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.