புதிய பொலிஸ் மா அதிபர் பொலிஸ் திணைக்களத்தின் பெயரினை மாற்றி வைத்தார்

பொலிஸ் திணைக்களம், இனிமேல் இலங்கை பொலிஸ் என அழைக்கப்படும் என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று(22) பூஜித்த ஜயசுந்தர பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற முதலாவது ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

கடந்த காலங்களில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் நீண்ட இடைவௌி இருந்ததாகவும் இதன் காரணமாக பொலிஸ் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இழக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

பொலிஸ் மொபைல் சேவையினூடாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய 06 பிரதான விடயங்களில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.