புதிய மருத்துவ மாணவர்கள் 300 பேர் இணைப்பு – சைட்டம் தலைவர்..

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்குப் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மருத்துவர் நெவில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சுமார் 300 புதிய மாணவர்களை சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ள மருத்துவர் நெவில் பெர்னாண்டோ உள்நாட்டு மாணவர்கள் 200 பேரும் வௌிநாட்டு மாணவர்கள் 100 பேரும் இதன் போது உள்வாங்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)