இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டில்ஷான், டி- 20 போட்டிகளில் 4000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் டி- 20 தொடரில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் டெர்பைஷயர்- துர்ஹாம் அணிகள் மோதின.
முதலில் விளையாடிய துர்ஹாம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெர்பைஷயர் அணிக்கு டில்ஷான், டுர்ஸ்டன் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
டுர்ஸ்டன் (21) ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹியூக்ஸ் 21 ஓட்டங்களில் வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய டில்ஷான் (54) அரைசதம் கடந்து இலக்கை எட்ட உதவினார்.
மேலும் மொத்தமாக டி-20 போட்டிகளில் 4000 ஓட்டங்களை கடந்தார்.
இருப்பினும் அடுத்து வந்தவர்கள் சொபிக்க தவறியதால் டெர்பைஷயர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் துர்ஹாம் அணி 5 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது.