புதிய ரயில்வே கால அட்டவணை எதிர்வரும் மாதம் முதல் அமுலுக்கு….

புகையிரத திணைக்களத்தினால் தயார் செய்யப்பட்டுள்ள புதிய புகையிரத கால அட்டவணை சமர்ப்பிக்கும் நிகழ்வு இன்று(20) போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

2006ஆம் ஆண்டுக்கு பின்னர், 11 வருடங்களுக்கு பிற்பாடு இவ்வாறு கால அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

தினசரி 24 மணி நேரமும் ரயில்கள் 396 முறையும் ரயில் பஸ் 25 முறையும் செயல்படுகின்றன.

தற்போது பிரதான புகையிரத பாதையூடாக (கொழும்பு – பதுளை) ஒரு நாளைக்கு 7 புகையிரதங்கள் பயணிக்கின்றதோடு, குறித்த மார்க்கத்தினூடாக புகையிரத சேவையினை அதிகப்படுத்துமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமுள்ளதாக ரயில்வே பொது மேலாளர்பி.ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கால அட்டவணை எதிர்வரும் மாதம் முதல் அமுலுக்கு வருகின்றதோடு புகையிரத நிலையங்களிலும் குறித்த அறிவுறுத்தல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.