2018ம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்திற்கான பொது மக்களின் அபிப்பிராயங்களையும் முன்வைக்குமாறு நிதி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமது அபிப்பிராயங்களை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு, செயலாளர் காரியாலயம், கொழும்பு கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சு கேட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)