புதிய வரிச்சுமை – நாடாளுமன்றில் வரி அதிகரிப்பு தொடர்பான ஏழு சட்டமூலங்கள்

புதிய வரிகள் மற்றும் வரி அதிகரிப்பு தொடர்பான ஏழு சட்டமூலங்கள் இன்று(20) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

குறித்த சட்ட மூலங்களின் ஊடாக பொதுமக்கள் மீது மேலதிக வரிச்சுமை விதிக்கப்படவுள்ளதுடன், சொத்துக்கள் மீதான புதிய வரிகளும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் மொபைல் தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கான வரி, வீடுகளுக்கான நேரடி செய்மதிச் சேவைக்கான வரி, செய்மதி கிரகித்தல் நிலையங்களுக்கான வரி, விளையாட்டு செய்திகள் ஒளிபரப்புக்கான வரி, மாளிகைகளுக்கான வரி, குடியகல்வு வரி, வாகன இறக்குமதியாளர்களுக்கான பதிவு வரி, பார் மற்றும் தவறணைகளுக்கான வரி, கெசினோ வரி, உள்ளிட்ட பல வரிகளுக்கான சட்டமூலங்களுக்கு திருத்தங்களும் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் பெறுமதி கூட்டிய வரி, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி, உள்நாட்டு இறைவரி சட்டம், நிதிச்சட்டம், பொருளாதார சேவைகள் கட்டணம், போன்ற துறைகளில் வரி அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.