புதிய வரி விதிக்கப்படுமாயின் எதிர்ப்பினை தெரிவிப்போமென எச்சரிக்கை.

தொகை மற்றும் சில்லறை வியாபாரத்திற்கு புதியதாக வரி விதிக்கப்படுமானால் அதற்கெதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சங்கங்களின் ஒன்றியத்தின் செயலாளர் இந்திக்க லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சங்கங்களின் ஒன்றியத்தினால் நேற்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.