பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய வற் வரி திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் அவசர கலந்துரையாடல் இன்று திங்களன்று(08) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
குறித்த குழுவில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா, சரத் அமுனுகம. நிமல் சிறிபால டீ சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன ஆகிய அமைச்சர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுசெயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திசாநாயக்கவும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை வற் வரி திருத்த சட்டமூலம் எதிர்வரும் 11ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.