(FASTGOSSIP|COLOMBO) – பிரபல பாடகர் இராஜ் வீரரத்னவினால் அனமியில் வெளியிடப்பட்டிருந்த பாடல் காணொளி தொடர்பில் அமைச்சர் நவீன் திசாநாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கினூடாக பதிவொன்றினை வெளியிட்டு அமைச்சர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“இராஜ் எனும் பாடகரால் அண்மைக்காலமாக மிகவும் கீழ்த்தரமான காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன.இது அவரது வியாபாரமாக இருந்தாலும் அதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஒருவரை தாழ்த்தி ஒருவர் உயர்வது என்பது கேவலம்..
இது அவருக்கு (இராஜிற்கு) முதல் முறை அல்ல.. கொண்டாடவுள்ள சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டே அவர் குறித்த காணொளி இனை வெளியிட்டுள்ளார்.
நாட்டுப்பற்று என ஒன்று இருக்க வேண்டும்…

இதற்கு பதிலடி வழங்கும் வகையில் இராஜ் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“Navin Dissanayake அமைச்சருக்கு எழுதிக் கொள்வது…
முதலில் கூற விரும்புவது, உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் தான் மிகவும் மரியாதை செலுத்துபவன்..
அமைச்சரே உங்களுக்கு எனது சின்ன Music Video இனைக் கண்டுகொண்டது போல் நாட்டின் அழிவு விளங்கவில்லையா..?

