புதிய வெட் வரிக்கு எதிராக கம்பஹா நகரில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் புதிய வெட் வரிக்கு எதிராக கம்பஹா நகரின் வியாபாரிகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்பஹா நகரின் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டே இந்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வெட் வரியை நிறுத்துமாறும் கோசங்களை எழுப்பியவாறும் , வெட் வரிக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த வாரங்களில் காலி, மஹரகம நகர வர்த்தகர்களும் வெட் வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.