கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இன்று(16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த சந்தேகநபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.