நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில், விஜய், சூர்யா, கார்த்தி போன்றோருடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக ‘மாரி’ படத்திலும், விஷால் ஜோடியாக ‘பாயும்புலி’ படத்திலும் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார். தமிழில் நடிகர் லாரன்ஸ் தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை அணுகினர்.
ஆனால், அவர் மறுத்துவிட்டார். புதுமுகங்கள் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். இந்த படத்தில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் தர முன் வந்துள்ளனர். ஆனால், அவர் மசியவில்லை. மறுத்து விட்டார்.
முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம்.