புது வேகப்பந்து வீச்சாளர்கள் இருவருடன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி…

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் வேக பந்து வீச்சாளரான துஷ்மன்த ஷமிர மீண்டும் அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், புதிய வேக பந்து வீச்சாளர் விகும் சங்ஜே அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் மெத்தீவ்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிம்பாபே அணியுடன் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.