புத்தகயாவில் முகவர் கைது

இலங்கையர்கள் 107 பேரை தம்பதிவ யாத்திரைக்கு அழைத்துச் சென்று புத்தகயாவில் நிர்க்கதிக்குள்ளாக்கிய முகவர் கொழும்பு ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பகுதியில் தம்பதிவ யாத்திரை முகவராக செயற்பட்டவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கமுவ பகுதியில் 107 பேரை தம்பதிவ யாத்திரைக்காக கடந்த 17 ஆம் திகதி அழைத்துச் சென்றுள்ளார்.

யாத்திரையின் சில நாட்களின் பின்னர் யாத்திரையை தொடர்வதாயின் தங்களிடம் இருக்கும் பணத்தினை வழங்குமாறு குறித்த நபர் கேட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு நேற்று (07) அழைத்துவரப்பட்ட யாத்திரிகர்களின் குறித்த சந்தேகநபரால் நிர்க்கதுக்குள்ளாக்கப்பட்ட 107 பேரும் 12 நாட்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளனர்.

ஊழல் மோசடி விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் ​ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.