புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பிரதேச சபைக்குரிய செம்பெட்டேவில் இருந்து வேலாசிய வரை செல்லும் வீதி புனரமைப்பின் போது பாதுகாப்பற்ற முறையில் வெட்டப்பட்டிருந்த குழியொன்றில் விழுந்து 32 வயதுடைய நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியினை புனரமைப்பு செய்யும் ஒப்பந்தம் புத்தளம் – பிரதேச சபையின் உப தலைவரால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , வீதியை புனரமைக்கும் போது அங்கு எச்சரிக்கை பலகை எதுவும் வைக்கப்படாமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.