இம்முறை தமிழ் – சிங்களப் புத்தாண்டில் கைகலப்புகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட விபத்துகள் கடந்த வருடத்தை விட 100% அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த கைகலப்புகளினால் சுமார் 56 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வீதி விபத்துக்களால் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 20% ஆல் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
####