புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 37-வது படத்திற்கு `காப்பான்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

`மாற்றான்’ படத்திற்கு பிறகு சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் த்ரில்லர் படத்திற்கு `காப்பான்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 12.10 மணிக்கு படத்திற்கு காப்பான் என்று தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் முதல்பார்வை போஸ்டரையும் வெளியிட்டது.

மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 17 ஆம் திகதி ஆரம்பமாகிறது. துவங்கவிருக்கிறது. அதற்குள் என்ஜிகே படப்பிடிப்பை முடித்துவிட்டு சூர்யா விரைவில் காப்பான் படக்குழுவில் இணையவிருக்கிறார்.

Image result for kaappaan