புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல்…

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இன்று(06) முதல் ஆரம்பமாகின்றன.

இலங்கை போக்குவரத்து சபையினால், 2000 இற்கும் அதிகமான மேலதிக பேரூந்து சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும், அதன்படி இன்று(06) முதல் எதிர்வரும் 24ம் திகதி வரையில் குறித்த இந்த விசேட போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த இந்த காலப்பகுதியில் அரச பேரூந்து பணியாளர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், நாளை(07) முதல், சித்திரைப் புத்தாண்டு நிமித்தம் விசேட ரயில் சேவைகளும் நடத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள மேலதிக முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தார்.

 

####