புத்துணர்ச்சி தரும் தக்காளி ஜூஸ்..

தினமும் காலையில் பழங்கள், காய்கறிகளில் செய்த ஜூஸ் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று தக்காளி எலுமிச்சை ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தக்காளி – ஒன்று ( பொடியாக நறுக்கவும்),
உப்பு- சிட்டிகை,
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்,
இஞ்சி – சிறிய துண்டு,
மிளகு சீரகத்தூள் – அரை டீஸ்பூன்.

செய்முறை :

தக்காளியை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்

மிக்சியில் தக்காளியுடன் உப்பு, இஞ்சி சேர்த்து அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய ஜூசுடன் மிளகு சீரகத்தூள், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

சூப்பரான சத்தான தக்காளி எலுமிச்சை ஜூஸ் ரெடி