புறக்கோட்டை மல்வத்த வீதியில் ஆபாசக் காட்சிகள் அடங்கிய இறுவட்டுகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த புறக்கோட்டை பொலிஸார் 1200 ஆபாச இறுவட்டுக்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
ஒரே தடவையில் 34 இறுவட்டுக்களை பிரதி செய்யும் மூன்று இயந்திரங்களையும் கணினி ஒன்றையும் 414 வெற்று இறுவட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் வத்தளையைச் சேர்ந்த 36 வயது நபரெனவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.