புற்றுநோயை ஏற்படும் பொருள் சந்தையில்; பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவசர எச்சரிக்கையொன்று பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் முப்பது சதவீதத்திற்கும் அதிகளவான எஸ்லடொக்சின் என்ற பதார்த்தம் அடங்கிய காய்ந்த மிளகாய்கள் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த காய்ந்த மிளகாய்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக சுற்றாடல் தொழிற்துறை மற்றும் சுகாதார பாதுகாப்பு பணிமனையின் உணவு பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்திய அதிகாரி சப்புமல் தனபால தெரிவித்துள்ளார்.

ஆபத்தை விளைவிக்கக்கூடிய 200 மெட்றிக் டொன் காய்ந்த மிளகாய்கள் இறக்குமதி செய்தவர்களுக்கு எதிராக
சுங்க வழக்கினை பதிவு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதேவேளை, காய்ந்த மிளகாய்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.