புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படும்…

புற்று நோய்காக வழங்கப்படுகின்ற மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15 இலட்சம் ரூபா வரை செலவு வரையறுக்கப்பட்டிருந்தது. இந்த வரையறை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. புற்று நோயாளர்கள் இறப்பது நோயினால் அல்ல நோய்க்கான சிகிச்சைக்கு செலவிடுவதற்கு பணம் இல்லாமையே ஆகும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.