2017 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2018ம் கல்வியாண்டில் புதிய பாடசாலைகளில் அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பான மேன்முறையீட்டை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்றுடன்(15) நிறைவடைகின்றது.
பெறப்பட்ட புள்ளியின் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்ட பாடசாலைகள் கிடைக்காமை மற்றும் கிடைத்துள்ள பாடசாலைகளுக்கு செல்வதில் உள்ள சிரமம் காரணமாக அதற்கு பதிலாக வேறொரு பாடசாலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த இந்த மேன் முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.
இந்த மாணவர்கள் இவ்வருடத்தில் ஆறாம் தரத்தில் கல்வியை தொடருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma..