புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற, மேலும் 5,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி வழங்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரைக் காலம், 15,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டு வந்ததுடன், தற்போது புதிதாக 5,000 மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய புலமைப் பரிசில் நிதி உதவி பெறும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 20,000 வரை அதிகரித்துள்ளது.

11 வருடங்களுக்கு பின்னரே, புலமைப்பரிசில் நிதி உதவிப் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.