புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொதி செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு இராணுவ சீருடை சிறுவர் ஒருவரின் அளவிலும் மற்றையது பெரியவர்களின் அளவிலும் காணப்பட்டுள்ளன.