எமி ஜாக்ஸன் விலங்குகள் பிரியை. பீட்டா அமைப்பிற்கு ஆதரவான இவர் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் சில அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
வீட்டில் செல்ல நாய்குட்டிகள் வளர்த்து வரும் எமி நேற்று திடீரென்று தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் ஒரு போட்டோ வெளியிட்டார். அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
புலி ஒன்றுக்கு புட்டிப்பால் ஊட்டி அதை கட்டி அணைத்தபடி போஸ் தந்திருந்ததே அதிர்ச்சிக்கு காரணம். தான் வீட்டில் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி பாப்லோவுடன் விளையாட ஒரு துணை கிடைத்துவிட்டது என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
விலங்குகள் பூங்கா ஒன்றில் அவர் புலிக்கு பால் ஊட்டிய காட்சியான இதில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லை என்று கூறப்படுகிறது. எமி தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார்.