அமெரிக்காவின் கடலோர பகுதியான கரோலினா நகரை புளோரன்ஸ் புயல் தாக்கியதில் தாய், குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
. அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்ததையடுத்து வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வடக்கு கரோலினாவில் புயலில் மரம் சாய்ந்து வீட்டின் மேல் விழுந்ததில் தாய், குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
புயலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா மற்றும் மேரிலாண்ட் நகர்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது.
புயல் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.