புளோரிடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யோகா நிலையம் ஒன்றில் மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்டமாக தகவல் வெளியானது.

தகவலறிந்து அங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.