புழுதிப்புயலால் 40 பேர் பலி…

வடமாநிலங்களில் புழுதிப்புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் இன்று(14) இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப்புயல் தாக்கியது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் புழுதியுடன் காற்று வீசியதால் இந்திரகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. 70 விமானங்கள் மாற்று பாதைகளில் திருப்பி விடப்பட்டதுடன், பல்வேறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புழுதி புயல் காரணமாக உ.பி.யில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.