அதி வேகத்தில் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலை உடனடியாக வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் என ஜேர்மனியில் நடைபெற்ற ஜி – 7 உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜி – 7 உச்சி மாநாடு ஜேர்மனியில் தொடங்கியது. இதில் புவி வெப்பமடைதலை கட்டுப்பாட்டினுள் வரவைக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகொள் வைக்கப்பட்டது.
மேலும், நிலக்கரி போன்ற எரிபொருட்களை பயன்படுத்தாமல் நாட்டின் வருமானத்தை பெருக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
சுற்றுசூழல் மாறுதல் தொடர்பாக ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மோர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்டி இருவரும் ஒருமித்த குரலில் மற்ற தலைவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் வரும் 2050ஆம் ஆண்டுக்குபின் நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருள் பயன்பாட்டை 40 – 70 சதவீத குறைத்து கொள்ளவேண்டும் என்ற அரசாங்கங்களுக்கு இடையேயான சுற்றுசூழல் குழுவின் பரிந்துரையை சாத்தியப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்யா- உக்ரையின் விவகாரம், ஐ.எஸ் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது, கிரீஸ் பொருளாதார நிலை ஆகியவை குறித்தும் பேசப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.