பூகொடையில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்…

(FASTNEWS|COLOMBO) பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது.

வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.