பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு விசாரணைக்கு

(FASTNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்கு 07 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் புவனேக அலுவிகார, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல் டீ பீ தெஹிதெனிய மற்றும் முருது பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு அழைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக 11 பேர் இணைந்து இந்த உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரிப்பதற்காக 07 உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.