(FASTNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் 01ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.