(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை இன்று(09) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன பிணை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுப்பதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு தவறியக் குற்றச்சாட்டின் கீழ், அவர்களை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில் இருவரும் கடந்த 03ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.