பூமியை இருள் சூளுமா ? ? ?

எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் நாள் அதிகாலை  03மணி தொடக்கம் 30ம் நாள் அதிகாலை 04.15 மணி வரை உலகம் இருளில் மூழ்கிக் கிடக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா உலக மக்களை எச்சரித்துள்ளது.

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குமுன்னர் பூமியில் நடைபெற்றதாக கருதப்படும் ஒரு நிகழ்வினைஅடிப்படையாகக் கொண்டே இவ்வாறான தகவல் ஒன்றை நாஸாவின் தலைமை விஞ்ஞானி ஜோனஸ் போல்டன் வெளியிட்டுள்ளார்.இந்நிகழ்வின் போது
பூமி,வியாழன்,வெள்ளி,யுரேனஸ்,போன்ற கோள்கள் ஒரே கோட்டில் வரிசையாக வந்துசேரும்,வியாழன்,வெள்ளி கோள்களின் பாதிப்புத்தான் பூமி இருளில் மூழ்க காரணமாக அமைகிறது 15ம் நாள் வெள்ளியும் வியாழனும் ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் தருணத்தில் வெள்ளி கோளானது முன் எப்போதும் இல்லாத வாறு 15 மடங்கு பிரகாசமாக ஒளிரத் தொடங்கும் இதனால் வியாழனில் உள்ள வாய்வுக்கள் பலமான தாக்கத்திற்கு உள்ளாகும் இதன் விளைவாக கட்டுப்படுத்த முடியாத அளவு ஐதரசன் வாயுவை விண்வெளியில் வெளியிடும் இவ் வாய்வு 15ம் நாள் அதிகாலை சூரியனை தாக்க தொடங்கும் இதனால் சூரியனின் மேற்பரப்பு வெப்ப நிலை 9000 பாகை வரை உடனடியாக உயரும் இதனால் சூரியனில் மிகப்பெரிய வெடிப்பு நிகழ ஆரம்பிக்கும் இதனால் சூரியன் தனது உட்கருவில் இருந்து வெப்பத்தை வெளியேற்றி வெடிப்பினை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் இதன் விளைவாக சூரியன் நீல நிறத்திற்கு மாறி விடும் இதில் இருந்து பழைய நிலைமைக்கு திரும்ப சூரியன் 14 நாட்கள் வரை எடுத்துகொள்ளும் இதனால் சூரியன் ஒளி மங்கி காணப்படுமே தவிர பூமிக்கு பெரிதாக பாதிப்புக்கள் இருக்காது.ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவ்வாறான நிகழ்வை ஆதாரமாக கொண்டு வெளியிடப்படும் இந்த தகவல் மனிதனின் கணிப்பாகவே கருத முடியுமே தவிர நிச்சயம் நடந்தேறும் ஒன்றாக முடிவு எடுத்துவிட முடியாது .

வெறும் ஏட்டளவில், நடக்க இருப்பவைகளை கணித்து நாள்,நேரம் என்பவற்றை துல்லியகமாக குறிப்பிடுவது எந்த ஆளவு சாத்தியம் ஆனது என்று சொல்ல தெரியவில்லை.

சூரிய குடும்பத்தில் ஏற்படும் இவ்வாறான மாறுதல்கள் எல்லாம் பூமியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இருந்தால் இன்னாள் வரை உலகில் மனித குலம் தன் வாழ்வை தொடர்ந்து இருக்க முடியாது .

அண்டத்தின் இரகசியங்களை துல்லியமாக கண்டறிய முடியாத நிலைமைதான் பிரபஞ்சத்தில் நிகழும் மாற்றங்கள் பூமியை பாதித்து விடுமோ என்று எச்சரிக்க தோன்றுகின்றது இதனால்தான் பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மக்களை பீதிக்கு உள்ளாகும் மிரட்டலான செய்திகளை வெளியிடுவதும் பின்னர் அவை நடைபெறா விட்டால் அதற்கான விளக்கங்களை மட்டும் தருவதற்கு காரணமாக அமைகிறது

-சப்ராஸ்-