ஆயிரக்கணக்கான புற்றுநோயாளர்களை குணப்படுத்த பெட் ஸ்கேனர் வாங்க வழிவகுத்த ஹமீத் உலகினை விட்டும் பிரிந்தார்…

பெட் ஸ்கேனர் இயந்திரத்தினை கொள்வனவு செய்ய மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்க முன்வந்த கதீஜா நம்பிக்கை நிதியத்தின் தலைவர் முஹமட் இனது மகன் ஹமீத் முஹமட் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(12) காலை உயிரிழந்த நிலையில், கடந்த காலங்களில் இவர் மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வைத்தியசாலையில் பெரும் குறையாக இருந்த பெட் ஸ்கேனர் இயந்திரத்தினை கொள்வனவு செய்ய ஆரம்ப கட்ட நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்ததும் குறித்த நபரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)