சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் விராட் கோஹ்லி தனது டுவிட்டர் வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தியில் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது வாழ்த்துச் செய்தியில் பெண்களுக்கு இடம்பெறும் பல்வேறு இன்னல்களுக்கு கவலையும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், இதற்கு முன்னர் கோஹ்லி தனது தாயுடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டதுடன், தனக்கு கிடைத்த பலம், அதிர்ஷ்டம் மற்றும் புகழ் அனைத்திற்கும் தனது தாயே காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
