பெண்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாக இருப்பதற்கு உறுதி பூணுவோம் – பிரதமர்..

(FASTNEWS | COLOMBO) – சமூகத்துக்கு பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க செயற்பாட்டை பாராட்டி அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(08) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறுகையில்;

“ஆண் மற்றும் பெண்ணின் சமமான சமூகப் பயன்பாட்டினை வலுவூட்டுவதற்கு மிகவும் பொருத்தமான சிறப்பான சந்தர்ப்பமொன்று இன்று உலகில் உருவாகியுள்ளது.

தற்போது தொழில்நுட்பம், தொடர்பாடல், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலை, கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு சிறந்த முறையில் காணப்படுகின்றது.

மேலும் உலகில் நிலைபேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் கூட சிறந்த முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

அந்த வகையில் பெண்கள் இதுவரை காலமும் பெற்றுக் கொண்ட வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகமும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்” என தெரிவித்துள்ளார்.