கனடாவில் பெண்களுக்கான 7வது ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகின்றது. வான்கூவரில் நடந்த கடைசி ‘ரவுண்ட்–16’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஆக ஜப்பான் அணி நெதர்லாந்தை சந்தித்தது.
போட்டி துவங்கிய 10வது நிமிடத்தில் அரியோஷி ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஜப்பான் அணி 1–0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் சகாகுசி (78வது நிமிடம்) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+2வது) நெதர்லாந்தின் வான் டி வென் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
முடிவில், ஜப்பான் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியை சுவீகரித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை முதல் காலிறுதி போட்டிகள் துவங்குகின்றன. இதில் ஜெர்மனி–பிரான்ஸ், சீனா–அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர்ந்து 27ம் தேதி நடக்கும் காலிறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியா–ஜப்பான், இங்கிலாந்து–கனடா அணிகள் மோதவுள்ளன.