தாயொருவர் மகனொருவரை கொலை செய்த அதிர்ச்சிகர சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து தெரியவருவது;
இந்திய மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராக்கி பால் பாண்டே ( வயது 36) இவரது மகன் சைதன்யா (வயது 13) 6- வகுப்பு படித்து வந்தார்.
ராக்கிபால் கணவர் தருணை பிரிந்து வாழ்ந்து வந்தார். தருண் நாக்பூரில் வசித்து வருகிறார் . ராக்கி பால் புனேவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த புதன்கிழமை வேலை விட்டு திரும்பிய போது மகன் உணர்வின்றி கிடந்ததால் ராக்கிபால் மகனை மருத்துவமனைக்கு கொண்டு செறார். ஆனால் அங்கு சைதன்யா இறந்து விட்டான்.சிறுவனின் மர்ம உறுப்பில் இருந்து ரத்தம் வழிந்தோடி உள்ளது. மேலும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பலத்த காயம் அடைந்து உள்ளது.
இந்த தகவல் குறித்து அறிந்ததும் சைதன்யாவின் தந்தை தருண் மருத்துவமனைக்கு வந்தார். அவரது மனைவி கூறியது போல் இது விபத்தால் ஏற்பட்ட மரணம் என்பதை மறுத்து விட்டார்.
இது குறித்து தருண் கூறும் போது :-
“நான் எனது மகனின் உடலை பார்த்தேன். என் கண்களால் என்ன நம்ப ம்,உடிய வில்லை. பொலிஸார் விபத்து மூலம் மரணம் ஏற்பட்டதாக வழக்குபதிவுச் செய்து உள்ளனர்.நான் எனது மகனின் பிரேத பரிசோதனைக்கு காத்து இருக்கிறேன். அவன் உடலில் அதிகமான காயங்கள் இருக்கின்றன. அதனால் அவன அடித்து தான் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் “.
பொலிஸார் நடத்திய விசாரணையில் மகனுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுத்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளார். இந்த நிலையில் மகன் சைத்னயாவை அடித்து கொலை செய்ததாக ராக்கிபாலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
ராகிபாலின் பக்கத்து வீட்டுகாரர் ஒருவர் கூறும் போது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து முடித்தவுடன் அவனை அவனது தாயார் பள்ளிக்கு அனுப்ப வில்லை. மேலும் அவனை வெளி விளையாட அனுப்புவதும் கிடையாது.என்று கூறி உள்ளார்.
பொலிஸார் ராக்கிபால் மீது கொலைவழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து பொலிஸார் கூறியதாவது:
ராக்கிபாலுக்கு வீட்டு உரிமையாளர் உள்பட பலருடன் தொடர்பு இருந்து உள்ளது. இது குறித்து மகனுக்கு தெரிந்து உள்ளது.இதனால் மகனை கொலை செய்ய தயார் திட்டம் தீட்டி உள்ளார். இதற்கு வேறு சிலரும் உதவி உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்