பெண் ஒருவரின் உயிரை குடித்த போக்கிமேன் கோ விளையாட்டு!!!

ஜப்பான் நாட்டில் ஓட்டுனர் ஒருவர் காரை இயக்கிக்கொண்டு ‘போக்கிமேன் கோ’ விளையாடிய போது எதிர்பாராதவிதமாக பெண் ஒருவர் மீதி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ஜப்பானில் உள்ள Tokushima என்ற நகரில் நேற்று முன்தினம் 39 வயதான நபர் ஒருவர் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டு மறுக்கையால் ‘போக்கிமேன் கோ’ விளையாட்டை விளையாடிச் சென்றுள்ளார்.

ஏதாவது ஒரு வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டு போக்கிமேன் கோ விளையாடினால் அது ஒரு எச்சரிக்கையை விடுக்கும்.

ஆனால், இந்த எச்சரிக்கையை நிராகரித்த அந்த ஓட்டுனர் தொடர்ந்து விளையாடிக்கொண்டு காரை ஓட்டியுள்ளார்.

அப்போது, எதிரே இரண்டு பெண்கள் சாலையை கடக்க முயன்றபோது அதனை கவனிக்காத ஓட்டுனர் இருவர் மீதும் காரை மோதியுள்ளார்.

இந்த விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் கவலைக்கிடமான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை பொலிசார் கைது செய்தபோது, சாலையை சரியாக கவனிக்காமல் போக்கிமேன் கோ விளையாடிக்கொண்டு காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

போக்கிமேன் கோ அப்ளிகேஷனை உருவாக்கிய Niantic என்பவர் விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.