பெண் நீதிபதி முன்னிலையில் நிர்வாணமாக நின்ற குற்றவாளி

பிரித்தானிய நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய வந்த குற்றவாளி ஒருவர் பெண் நீதிபதி முன்னிலையில் நிர்வாணமாக நின்ற சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள ஹம்ப்ஷிரே  நகரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்  கௌக்ஹ் (56). முன்னாள் கடற்படை பயிற்சி குழு உறுப்பினரான அவர், பொது இடங்களில் நிர்வாணமாக திரிந்ததால் சமூக விரோத ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலும், ஆடைகளை அணிய மறுத்து, சிறை அறையிலும் நிர்வாணமாகவே இருந்துள்ளார்.

இந்நிலையில், இவரது வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு விசாரணை நேற்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் நீதிபதிகள் முன்னிலையில் முழு நிர்வாணமாக நிற்க கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுருந்ததால், காலணி மற்றும் காலுறைகள் மட்டும் அணிந்துகொண்டு பெண் நீதிபதி முன்னிலையில் நின்றுள்ளார்.

சிறை அறையிலிருந்து வீடியோ மூலம் நீதிபதி முன் குற்றவாளி நிர்வாணமாக தோன்றியதை கண்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை கண்ட வழக்கறிஞ்ஞர்கள், அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யுமாறு நீதிபதியை கேட்டுக்கொண்டனர்.

குற்றவாளியின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பெண் நீதிபதியான ராபர்ட்டி, பொது இடங்களில் நடத்தை விதிகளை மீறியதாக சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில் தற்போதும் நிர்வாணமாக நீதிபதிகள் முன் வந்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

கடந்தாண்டு இதேபோல் நிர்வாணமாக நீதிபதிகள் முன் தோன்றியதால் அவரை தனி சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆடைய அணிய மறுத்ததால், கடந்த 8 வருடங்களாக பல்வேறு வழக்குகளில் ஸ்டீபன்  கௌக்ஹ்  சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இது குறித்து தனியார் பத்திரிகை ஒன்றிற்கு கடந்த 2012ம் ஆண்டு அளித்த பேட்டியில், பொது இடங்களில் ஆடை அணியாமல் இருப்பது மனித உரிமைகளில் ஒன்று எனக்கூறியுள்ளார்.

பிரித்தானிய நீதிமன்ற வரலாற்றில் முதன் முதலாக ஆடையின்றி நீதிபதிகள் முன் தோன்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.