பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் சாரதி கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற இன்று (07) உத்தரவிட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவில் கடமைற்றிவரும் குறித்த பெண் உத்தியோத்தர் மீது சம்பவதினமான நேற்று (06) பிற்பகல் சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கையைப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொண்டு வந்ததையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியில் இருந்து இடைநிறுத்தியதுடன் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனை வழங்கியதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்

கைது செய்யப்பட்டவர் அம்பாறையைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் பொலிஸ் சாரதியாக கடமையாற்றி வருகின்றார் எனவும் இவரை இன்று (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.