இலங்கை மத்திய வங்கி வசமுள்ள பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றினை வெளியிட்டு மத்திய வங்கி குறித்த இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
பிணை முறி விநியோகம் தொடர்பான அறிக்கையின் பிரதி, மத்திய வங்கியின் ஆளுநருக்கு கிடைக்கப் பெற்றதையடுத்து, மத்திய வங்கியின் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் 04 அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மேற்பார்வை வரம்பின் கீழ் வருகின்ற பெப்பர்ச்சுவல் ட்ரெஸரிஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#rishma