‘ பெரிது உதவியாக இருந்த இலங்கை அணியின் நிர்வாகத்திற்கு நன்றி’ – சந்திமால்..

முத்தரப்பு தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார்.

நேற்று(06) நடைபெற்ற முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டி குறித்து இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் கூறுகையில்,

“..தொடரின் முதல் போட்டியை வெற்றிகரமாக துவக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த தொடர்களில் பெற்ற வெற்றியே எங்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்தது. பயிற்சியின் போது எங்களுக்கு பெரிது உதவியாக இருந்த இலங்கை அணியின் நிர்வாகத்திற்கு நன்றி.

அதுமட்டுமின் இந்த வெற்றி எல்லாமே அணியில் இருக்கும் அனைத்து வீரர்களையே சாரும், தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டனர்.

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்…”

 

# riii