சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு நாணயங்களை சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 52 வயதான நுகேகொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர், சிங்கப்பூர் டொலர், யூரோ மற்றும் இலங்கை ரூபா உள்ளிட்டவை அடங்குகின்றன.
குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் மொத்த பெறுமதி 64,13,273 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது