பெருந்தோட்டத் தொழிலாளர்களது 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்துக்கு ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 4ம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களது நாளாந்த சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இதுவரையில் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.